மானிய விலையில் குறுவை நெல் விதைகள்
குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்களை மானிய விலையில் வாங்கி விவசாயிகள் பயனடையலாம் என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் கூறினார்.
மயிலாடுதுறை:-
குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் ரகங்களை மானிய விலையில் வாங்கி விவசாயிகள் பயனடையலாம் என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல் ரகங்கள்
மயிலாடுதுறை வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு ஆடுதுறை 43, 45, 53, கோ.51, அம்மை 16 ஆகிய குறுகிய கால நெல் ரகங்கள் உகந்ததாகும். இந்த நெல் ரகங்கள் நல்ல முளைப்பு திறனுடன், கலப்புகள் இல்லாத அரசு சான்று பெற்ற விதைகள், மயிலாடுதுறை, காளி, வில்லியநல்லூர், மணல்மேடு ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நெல் ரகங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் குறுவை நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீர்காழி
இதேபோல் சீர்காழி வேளாண் உதவி இயக்குனர் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சீர்காழி வட்டாரத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், காரைமேடு, திருவெண்காடு ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் குறுவை நெல் விதைகளை வாங்கி கொள்ளலாம்’ என கூறி உள்ளார்.