40 கிலோ கெட்டுப்போன மாம்பழங்கள் அழிப்பு
40 கிலோ கெட்டுப்போன மாம்பழங்கள் அழிப்பு
உடுமலையில், பழக்கடையில் கெட்டுப்போன 40 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை அறிவுரையின்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், கோடீஸ்வரன், சிரஞ்சீவி ஆகியோர் கொண்ட அலுவலர்கள் உடுமலை பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில், மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். உடுமலை பை-பாஸ் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, கல்பனாசாலை உள்ளிட்ட பலபகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது ஒருகடையில் கெட்டுப்போன மாம்பழம் 40கிலோ இருந்தது.அதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர்.
ஷவர்மா
இதேபோன்று பழனிசாலை, பொள்ளாச்சி சாலை, கல்பனாசாலை, தளி சாலை ஆகிய சாலைப்பகுதிகளில் உள்ள அசைவ ஓட்டல்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு அசைவ ஓட்டலில் ஷவர்மா என்ற உணவிற்கான கோழி இறைச்சியில் கூடுதல் நிறம் சேர்க்கப்பட்டிருந்தது
தெரியவந்தது. இதையொட்டி அந்த 2 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.