கரும்பு விவசாயிகளுக்கு இலவச தகவல் தொடர்பு மைய எண் அறிமுகம்

கரும்பு விவசாயிகளுக்கு இலவச தகவல் தொடர்பு மைய எண் அறிமுகம்

Update: 2022-05-07 10:20 GMT
ரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் இலவச தகவல் தொடர்பு மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கீழ்பவானி பாசன பகுதிகள்
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டு தோறும் இரு பிரிவுகளாக கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி கரும்பு, மஞ்சள், வாழை, நஞ்சை சம்பா நெல், தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா எண்ணெய் வித்து பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி மற்றும் காய்கறி வகைகள் கீரை வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் கரும்பு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து சாகுபடி செய்து உள்ளனர். மேலும் கரும்பு சாகுபடியில் குறைந்த நீர் நிர்வாகத்தை பயன்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து உள்ளனர். இதில் அறுவடை செய்த கரும்புகளை இப்பகுதி கரும்பு விவசாயிகள் ஈ.ஐ.டி. புகளுர் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதன்படி ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் புகளூர் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை தமிழகத்தில் கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு நவீன சாகுபடி வேளாண் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்படி தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கரும்பு அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு நவீன கரும்பு சாகுபடி வேளாண்மை அறுவடை தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறது.
தகவல் தொடர்பு எண்
இதன் தொடர்ச்சியாக ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்ட கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் கரும்பு பதிவு, கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் அறிந்து கொள்ளுதல் மற்றும் கரும்பு விவசாயம் சம்பந்தப்பட்ட சேவைகள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப கருத்துக்கள் ஆலோசனைகள் பெற தற்போது இலவச தகவல் தகவல் தொடர்பு மைய எண்ணை புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 18001034330 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கரும்பு விவசாயிகள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான கரும்பு நடவு செய்தல், சாகுபடி, பயிர் மேலாண்மை, உர மேலாண்மை, அறுவடை உட்பட அனைத்து கரும்பு சாகுபடி சார்ந்த தகவல்களை இலவசமாக பெற்று பயன் அடைய முன் வரவேண்டும். இத்தகவலை புகளூர் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்