2-வது முறையாக மாணவியை கடத்தியவர் மீது வழக்கு
2-வது முறையாக மாணவியை கடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே பொம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் கடந்த 2-ந் தேதி பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் தீவட்டிப்பட்டி போலீசில் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சின்ராஜ் (வயது 27) என்பவர் தங்களது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கடத்தி சென்ற சின்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஏற்கனவே சின்ராஜ், அதே மாணவியை கடத்திச் சென்ற வழக்கில் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து மீண்டும் கடத்திச்சென்றது தெரியவந்துள்ளது.