காதலிப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை;போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

சேலத்தில் காதலிப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-06 22:18 GMT
சேலம்:
சேலத்தில் காதலிப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
சேலம் பஞ்சதாங்கி ஏரிக்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 26). இவர் சேலத்தில் ஒரு பாத்திரக்கடையில் கூலி வேலை செய்து வந்தார்.
சேலம் குகை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் மாணவியை மாரிமுத்து கடந்த 5 மாதங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார். 
மேலும், அவர் மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றபோது, அங்கு பின்தொடர்ந்து வந்த மாரிமுத்து, அவரின் தோள் மீது கை போட்டு தொல்லை கொடுத்தார்.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அவரிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு வந்து நடந்த விவரத்தை தாயாரிடம் கூறி அழுதாள். இது தொடர்பாக சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். 

மேலும் செய்திகள்