வெயிலில் மயங்கி விழுந்த லாரி டிரைவர் சாவு

வெயிலில் மயங்கி விழுந்த லாரி டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2022-05-06 22:13 GMT
ஆவூர்:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள உருமாண்டபாளையத்தை சேர்ந்தவர் காசிநாதன்(வயது 52).  லாரி டிரைவரான இவர், நேற்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் அருகே ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்தார். தொழிற்சாலை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, அதன் அருகே வெயிலில் நின்று கொண்டிருந்த காசிநாதன் திடீரென மயங்கி விழுந்தார். 
இதைப் பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்