விபத்தில் கொத்தனார் பலி
செக்கானூரணி அருகே விபத்தில் கொத்தனார் பலியானார்.;
நாகமலைபுதுக்கோட்டை
செக்கானூரணி அருகே உள்ள கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45). ெகாத்தனார்.சம்பவத்தன்று நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருந்து திருநகர் செல்வதற்காக தனியார் கல்லூரி அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.