வெவ்வேறு சம்பவங்களில் டீ மாஸ்டர் உள்பட 3 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் டீ மாஸ்டர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-05-06 20:55 GMT
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியர்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி ராஜசேகர் (வயது 33). இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரும், சுஜிதா (31) என்ற பெண்ணும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கவின் (11), ரெனிஸ் (10) என்ற மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அந்தோணி ராஜசேகர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரமசிங்கபுரம் கட்டபொம்மன் காலனியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் ரமேஷ் (34). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்விரு சம்பவங்கள் பற்றி தகவல் அறிந்ததும், விக்கிரமசிங்கபுரம் போலீசார் விரைந்து சென்றனர். இருவரிடன் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நெல்லை மேலப்பாளையம் குறிஞ்சி ஆண்டவர் 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (77). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சுப்புலட்சுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட சுப்புலட்சுமி நேற்று காலை வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்