எதிர்ப்பு இருப்பதால் ஆதரவும் அதிகமாக இருக்கிறது

எதிர்ப்பு இருப்பதால் ஆதரவும் அதிகமாக இருக்கிறது என குமரி மாவட்டம் வந்த மதுரை ஆதீனம் பேட்டி அளித்தார்.;

Update:2022-05-07 02:15 IST
 கருங்கல்:
 மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று குமரி மாவட்டம் வந்தார். அப்போது, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
 மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் விடுமுறை அறிவிக்காதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைப்பேன். ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். கோவிலில் அரசாங்கம் தானே இருக்கிறது. அரசியல்வாதிகள் தானே அறநிலையத்துறை அமைச்சராகிறார்கள். பிரதமரை சந்திக்க கூடிய நேரம் வரும்போது சந்திப்பேன். எனக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார்கள். பட்டின பிரவேசத்திற்கு எதிர்ப்பு இருப்பதால் தான், ஆதரவு அதிகமாக இருக்கிறது. பல்லக்கு சுமக்க எதிர்ப்பு ஏற்பட்டதால் நான் உள்பட தமிழ்நாடே சுமக்க தயாராக உள்ளது. பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஆன்மிகத்தில் பிரச்சினை என்றால் நான் தொடர்ந்து குரல்கொடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்