மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் மற்றும் போலீசார் பறக்கை சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பறக்கை அருகே உள்ள கக்கன்புதூர் நடுதெருவை சேர்ந்த சபின் (வயது19) என்பது தெரியவந்தது. மேலும், அவரை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து சபினை கைது செய்தனர்.