115 மையங்களில் 26,933 மாணவ-மாணவிகள் எழுதினர்

விருதுநகர் மாவட்டத்தில் 115 மையங்களில் 27 ஆயிரத்து 933 மாணவ மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய நிலையில் 1,750 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.;

Update: 2022-05-06 19:45 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் 115 மையங்களில் 27 ஆயிரத்து 933 மாணவ மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய நிலையில் 1,750 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 
தமிழகம் முழுவதும் கொரோனாதொற்று காரணமாக கடந்த 2  கல்வியாண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் தற்போது முழு அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் பள்ளிக்கல்வி துறை நடப்பாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடத்த திட்டமிட்டு நேற்று முதல் தேர்வு தொடங்கியுள்ளது.
 விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 115 மையங்களில் நடைபெற்றது. 13,635 மாணவர்களும் 13,298 மாணவிகளும் ஆக மொத்தம் 26, 933 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
பறக்கும் படை அலுவலர்கள் 
 663 தனித்தேர்வர்களும், 186 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர். 1,750 அலுவலர்கள் தேர்வு பணியில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்த மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லி, காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அமலா மேல்நிலைப்பள்ளி, மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சக்தி சாரதா மெட்ரிக்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
 அவருடன் பறக்கும் படை அலுவலர்கள் பிச்சை மற்றும் கவிதா ஆகியோரும் உடன் சென்றனர். 

மேலும் செய்திகள்