தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-06 19:15 GMT
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மருவத்தூர் அம்மா விளையாட்டு திடல் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விளையாட்டு திடல் முற்றிலுமாக மறைக்கப்பட்டு சேதம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த விளையாட்டு திடலை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மருவத்தூர், அரியலூர். 

போக்குவரத்திற்கு இடையூறான தடுப்புச்சுவர் 
பெரம்பலூர்-அரியலூர் சாலையில் உள்ள ஒதியம் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் திரும்பும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தடுப்புச்சுவரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
ராஜன், ஒதியம், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்