தீத்தடுப்பு செயல் விளக்கம்
மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது
மன்னார்குடி:
மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரியில், தீத்தடுப்பு சாதனங்கள் சரியாக இருக்கிறதா? என்று தீயணைப்பு துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஊழியர்களுக்கு தீ தடுப்பு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பது எப்படி?, நோயாளிகளை எவ்வாறு வெளியே தூக்கிச்செல்வது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. திருவாரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை உதவி அலுவலர் இளஞ்செழியன் தலைமையில் இந்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மன்னார்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.