திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு

குடவாசல் அருகே மருத்துவக்குடி திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2022-05-06 19:01 GMT
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள மருத்துவக்குடி திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக மற்றும் மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இரவு 8 மணியளவில் கன்னிகா பூஜை, மகாலட்சுமி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடந்தன. நேற்று காலை கோ பூஜை, கஜ பூஜை மற்றும் 2-ம் கால பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து புண்ணிய தீர்த்தம் அடங்கிய கடம் மங்கள வாத்தியத்துடன் வலம் வந்து கோபுர கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக்குடி கிராமமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்