கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-05-06 18:59 GMT
விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள ராதாபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் அருண் (வயது 19). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயதுடைய மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

  இதனால் அம்மாணவி தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அருண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்