வீழிநாதேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா
குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. நேற்று காலை சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும், 1,008 தாமரைப் பூக்களால் அர்ச்சனைகளும் நடந்தது. இரவு 10 மணி அளவில் விஸ்வகர்ம சமுதாய மக்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் வீழிநாதர், சுந்தரகுசாம்பிகை அம்பாளுடன் பூத வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் நான்கு வீதிகளிலும் உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.