27 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

27 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-06 18:42 GMT
அரியலூர்
தமிழக காவல் துறையில் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்த போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, போலீஸ் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத 27 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்றவர்களை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தும், அனைவரும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்டு வழக்குகளை உடனுக்குடன் தீர்வுகண்டு சிறப்பாக பணிபுரிய பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

மேலும் செய்திகள்