வேலூர் ஜெயிலில் முருகன் தொடர் உண்ணாவிரதம்
வேலூர் ஜெயிலில் முருகன் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.;
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனக்கு பரோல் கேட்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று அவர் 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், உண்ணாவிரதம் இருப்பது குறித்து அவர் முறையாக கடிதம் அளிக்கவில்லை. ஜெயில் உணவை தவிர்த்து அவர் பழங்கள், கீரையை சாப்பிட்டு வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.