சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். அப்போது அவா், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் பூஜைக்கு கொடுத்திருந்த வேலை பெற்றுக்கொண்டு திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார்.

Update: 2022-05-06 18:31 GMT
சிக்கல்:
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். அப்போது அவா், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் பூஜைக்கு கொடுத்திருந்த வேலை பெற்றுக்கொண்டு திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். 
சசிகலா சாமி தரிசனம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள சிக்கலில் பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி சசிகலா சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கோவிலில் பூஜைக்காக செம்பிலான வேலை வழங்கி இருந்தாா்.
இந்த நிலையில் நேற்று நண்பகல் 12 மணிக்கு சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு சசிகலா வந்தார். கோவிலில் சிங்கார சண்முகநாதர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்த அவர் வழிபாடு முடிந்த பின்னர் தான் பூஜைக்கு கொடுத்திருந்த வேலை பெற்றுக்கொண்டு கோவிலின் உட்பிரகாரத்தை சுற்றி வந்தார். 
திருச்செந்தூருக்கு சென்றார்
பின்னா் அவர் வேலை திருச்செந்தூர் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்த திருச்செந்தூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். சசிகலாவுடன் அவருடைய உதவியாளர்கள், பாதுகாவலர்கள் மட்டுமே வந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்