முத்திரையிடாமல் பயன்படுத்திய எடைஅளவுகள்- தராசுகள் பறிமுதல்

முத்திரையிடாமல் பயன்படுத்திய எடைஅளவுகள்- தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2022-05-06 18:29 GMT
பெரம்பலூர்
சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் சட்டமுறை எடைஅளவு கட்டுப்பாட்டு அதிகாரி உத்திரவின்படி, திருச்சி கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோர் அறிவுரைகளின்படி பெரம்பலூர் தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்கள், பெரம்பலூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும்பெரம்பலூர், முசிறி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், அரியலூர், முசிறி முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று பெரம்பலூரில் காய்கறி சந்தை மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் எடை அளவுகள், மின்னணு தராசுகள், எடைகற்களை சோதித்து ஆய்வு செய்தனர். அப்போது சட்டமுறை எடை அளவு சட்டத்தின்படி உரிய முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட எடைஅளவுகள், மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முத்திரையிடாமல் எடைஅளவுகள், தராசுகளை பயன்படுத்தும் வியாபாரிகள், வணிகர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்