லாரியில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்

லாரியில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்

Update: 2022-05-06 18:26 GMT
கூடலூர்

கூடலூர் நகரில் இன்று இன்ஸ்பெக்டர் அருள் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது மூட்டைகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மினி லாரியுடன் 130 புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கூடலூர் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41), 2-ம் மைல் பகுதிைய சேர்ந்த மினி லாரி டிரைவர் அசைனார் (30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்