டாக்டர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.4¼ லட்சம் அபேஸ்
டாக்டர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.4¼ லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர்
வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது 38). இவர் தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 31-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் தனது வங்கி விவரங்களை அப்டேட் செய்யும்படி தெரிவித்து இருந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதற்கான லிங்க்கில் சென்று அதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து 3 தவணையாக ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 983 -ஐ மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜித்குமார் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.