10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 17 ஆயிரத்து 886 பேர் எழுதினார்கள்

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 17 ஆயிரத்து 886 பேர் எழுதினார்கள்

Update: 2022-05-06 18:11 GMT
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 17 ஆயிரத்து 886 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 559 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10-ம் வகுப்பு தேர்வு
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுநேற்று தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களை சேர்த்து 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 9 ஆயிரத்து 455 மாணவர்களும், 8 ஆயிரத்து 990 மாணவிகளும் சேர்த்து 18,445 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
வரவில்லை
இவர்களில் 9 ஆயிரத்து 75 மாணவர்களும், 8 ஆயிரத்து 811  மாணவிகளும் சேர்த்து 17 ஆயிரத்து 886 பேர் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 380 மாணவர்களும். 179 மாணவிகளும் சேர்த்து 559 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மேலும் செய்திகள்