கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2022-05-06 18:09 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் கீழசேதுரஸ்தா பகுதியை சேர்ந்தவர் ராஜமோகன் (வயது40). இவரிடம் கருப்பம்புலத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று யானைக்கட்டித்தெரு, கரியாப்பட்டினம் சாலையில் ராஜமோகன், ராஜீவ்காந்தியை சந்தித்து பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜீவ்காந்தி தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் ராஜமோகனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜீவ்காந்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்