ஆட்டோ-ஜீப் மோதல்; பெண் பலி

கடமலைக்குண்டு அருகே ஆட்டோ-ஜீப் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

Update: 2022-05-06 18:07 GMT
கடமலைக்குண்டு: 

கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியில் இருந்து  கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று குமணன்தொழு நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை கடமலைக்குண்டுவை சேர்ந்த பிரவீன் என்பவர் ஓட்டினார். குமணன்தொழு அருகே சாலை வளைவில் எதிரே வந்த ஜீப், ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மேலப்பட்டியை சேர்ந்த காளீஸ்வரன் மனைவி மாரியம்மாள் (வயது 57) படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 

மேலும் ஆட்டோவில் வந்த மேலப்பட்டியை சேர்ந்த தங்கப்பிள்ளை (38), பழனியம்மாள் (50), முத்துமாரியம்மாள் (50), லட்சுமி (48), ஆட்டோ டிரைவர் பிரவீன் (26) மற்றும் ஜீப்பில் வந்த குமணன்தொழுவை சேர்ந்த பேயாண்டி (58) உள்பட 8 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களை மயிலாடும்பாறை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக ஜீப் டிரைவர் மணிகண்டன் (25) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்