பார்சல் சர்வீஸ் லாரி மோதி வாலிபர் பலி
பார்சல் சர்வீஸ் லாரி மோதி வாலிபர் பலி
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர்திருவாதி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சிவக்குமார் (வயது 29). இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த பார்சல் சர்வீஸ் லாரி மோதியதில் சிவக்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பார்சல் சர்வீஸ் லாரி டிரைவரான விக்கிரவாண்டி அருகே அன்னியூரை சேர்ந்த மணிகண்டன்(38) என்பவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.