ஏலகிரிமலையில் இரு தரப்பினர் மோதல்

ஏலகிரிமலையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 12 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-06 18:04 GMT
ஜோலார்பேட்டை

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த சிவா அய்யாதுரை (வயது 50) என்பவருக்கு ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் ஒரு ஏக்கருக்கும் மேலாக நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்த குட்டி என்பவருக்கும், சிவா அய்யாதுரை என்பவருக்கும் இடைேய வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று சிவா அய்யாதுரை பணியாட்களுடன் வந்து நிலத்தில் அவருடைய தாயாரின் உருவப்படத்தை வைத்து பூஜை செய்ததாகத் தெரிகிறது. 

நிலம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஏன் நிலத்தில் கம்பி வேலி போடுகிறாய்? எனக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருதரப்பினரும் கத்தி, இரும்புக்கம்பி, கல் ஆகியவற்றால் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

அதில் சிவா அய்யாதுரை, இவரின் மனைவி மற்றும் பணியாட்களான சாந்தி, ஆனந்த்பாபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். குட்டி தரப்பில் அவரும், தூக்கன், மலையான், சிவக்குமார் ஆகிேயார் படுகாயம் அடைந்தனர். 
இது குறித்து சிவா அய்யாதுரை கொடுத்த புகாரின் பேரில் மலையான்-மனைவி, குட்டி-மனைவி, மலையானின் மகன்கள் 2 பேர் என 6 பேர் மீதும், குட்டி கொடுத்த புகாரின் பேரில் சிவா அய்யாதுரை-மனைவி, ரமேஷ்பாபு, ஆனந்த்பாபு மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேர் என இரு தரப்பை சேர்ந்த மொத்தம் 12 பேர் மீது ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்