ஒன்றியக்குழு கூட்டத்தில் வாக்குவாதம்
ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களுக்கான ஊராட்சிகளில் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்வதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் கூறினர். ஒன்றியக்குழு உறுப்பினர் உமாகண்ணுரங்கம், துணைத்தலைவர் ஸ்ரீதேவிகாந்தி ஆகியோர் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு தமிழக அரசால் ரூ.1 கோடியே 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மல்லப்பள்ளி ஊராட்சிக்கு மட்டும் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதவும், அனைத்து கவுன்சிலர்களுக்கும் சரிசமமாக நிதியை பிரித்து கொடுக்க வேண்டும். இல்லை எனில் 15-வது மானிய குழு நிதியை நிறுத்தி வைக்குமாறு கூறினர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து ஒன்றியக் குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை பணிகளை முழுமையாக முடிக்க சுழற்சி முறையில் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.