பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா

பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-05-06 17:51 GMT
தொண்டி, 
திருவாடானையில் அறம்வளர்த்த பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த கோவில் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிளக்கு, பெண்கள் மது குடம் எடுத்து வீதி உலா நிகழ்ச்சி, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி தேரில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜைகளை கோவில் பூசாரி செல்வரத்தினம் நடத்தினார். ஏற்பாடுகளை  ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு மற்றும் பிடாரி கோவில் தெரு பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்