போலி ரசீது மூலம் சுங்கவரி வசூல்
சோளிங்கர் நகராட்சியில் போலி ரசீது மூலம் சுங்கவரி வசூல் செய்யப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சோளிங்கர்
சோளிங்கர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருடமாகியும், பேரூராட்சி பெயரில் வெள்ளைத்தாளில் சீல் அடித்து 50 ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள், நடைபாதை வியாபாரிகளிடம் தினமும் இதுபோன்று வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் சோளிங்கர் நகராட்சி 8-வது வார்டு உறுப்பினர் கோபால் அவரது வீட்டை புதுப்பிக்க பழைய வீட்டை இடித்து அதில் இருந்த மண், செங்கற்களை எடுத்து சென்ற லாரிக்கும் 50 ரூபாய் பேரூராட்சி பெயரில் ரசீது போட்டு, செயல் அலுவலர் கையொப்பம் இன்றி பணம் பெறப்பட்டுள்ளது.
எனவே முறைகேடாக வசூல் செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் புகார் கோபால் மனு கொடுத்துள்ளார்.