வெப்படை அருகே அச்சக உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

வெப்படை அருகே அச்சக உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு;

Update: 2022-05-06 17:41 GMT
பள்ளிபாளையம்:
வெப்படை அருகே அல்லிநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 54). இவர் அந்த பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் இரவு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து காளியப்பன் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாா். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்