காரை திருடி செல்ல முயன்ற வாலிபர் கைது

காரை திருடி செல்ல முயன்ற வாலிபர் கைது

Update: 2022-05-06 17:40 GMT
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே மு.பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 48). இவர் நேற்று முன் தினம் இரவு தனது காரை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு தூங்கச்சென்று விட்டார். அதிகாலை 3.30 மணிக்கு காரின் என்ஜினை இயக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் திடுக்கிட்டு பாஸ்கரன் எழுந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் காரை திருடிச் செல்வது தெரியவந்தது. உடனே அவர் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காரை திருடி செல்ல முயன்றவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில்,  அவர்  வெள்ளகோவில் குட்டகாட்டுப்புதூரை சேர்ந்த கோகுல் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து கோகுலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்