ரூ.80 ஆயிரம் திருட்டு

நள்ளிரவில் ஜவுளிக்கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-06 17:37 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் மொத்த விற்பனை ஜவுளிக்கடை வைத்துள்ளார். வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த கடையில் சிலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கடை பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு உள்புறம் படுத்து தூங்க சென்று விட்டனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர் கடையில் கல்லா பெட்டி உள்ள பகுதியின் மேலே இரும்பு தகர கூரையை பிரித்து உள்ளே புகுந்துள்ளார். அந்த மர்ம நபர் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.80 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை திருடி உள்ளார். கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதை கண்காணித்த மர்ம நபர் அந்த காட்சி சேமிப்பு பெட்டகத்தையும் திருடிச்சென்றுவிட்டார். அதிகாலையில் பணியாளர்கள் எழுந்து பார்த்தபோது கடையில் திருடுபோயிருப்பது தெரிந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகர் காவல்நிலையம், பஜார் காவல்நிலையம் மட்டுமல்லாது நகரின் முக்கிய சாலையில் உள்ள இந்த கடையில் திருடுபோயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்