பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ17லட்சம்
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ17லட்சம்
உடுமலை:
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 5-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, 20-ம்தேதி அம்மன் திருக்கல்யாணம், 21-ந் தேதி தேரோட்டம் என 23-ந் தேதிவரை நடந்தது. இந்த கோவிலில் 4நிரந்தர உண்டியல்கள் உள்ளன. தேர்த்திருவிழாவையொட்டி கூடுதலாக 10 தற்காலிக உண்டியல்கள் தேர்த்திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் (திருப்பூர்) ஆர்.செல்வராஜ், மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்த பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களால் பங்கேற்றனர். எண்ணப்பட்டது.அதன்படி கோவில் 4 நிரந்தர உண்டியல்களில் ரூ.13 லட்சத்து 8 ஆயிரத்து 355-ம்,
10 தற்காலிக உண்டியல்களில் ரூ.4லட்சத்து 9 ஆயிரத்து 772-ம் என மொத்தம் ரூ.17லட்சத்து 18ஆயிரத்து 127 இருந்தது. மேலும் 86 கிராம் தங்கம், 295கிராம் வெள்ளியும் காணிக்கையாக வந்திருந்தது.
இதற்கு முன்பு 2019-ம்ஆண்டில் கோவில் திருவிழாவின்போது மொத்தம் ரூ.11 லட்சத்து 70ஆயிரத்து 608 காணிக்கையாக வந்திருந்தது. இந்த ஆண்டு அப்போது வந்த காணிக்கை தொகையை விட ூ.5லட்சத்து47 ஆயிரத்து 519 கூடுதலாக வந்துள்ளது.