கொல்லங்கோடு அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-05-06 17:30 GMT
நாகர்கோவில், 
கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் இலுப்பவிளையை சேர்ந்தவர் ஜெகன் (வயது 27), வாடகை கார் ஓட்டுனர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற ஜெகன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்