7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரக்கோணம்
அரக்கோணம் தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அரக்கோணம் அடுத்த பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த அஜித் (24), வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரபு (24), சித்தேரி கிராமத்தை சேர்ந்த குமரேசன் (22), தண்டலம் கிராமம் கே.ஆர்.பி.நகரை சேர்ந்த ஹரிதாஸ் என்கிற அஜித் (21), சென்னை, திருவெற்றியூர், சின்ன மேட்டூர் பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (33), அரக்கோணம் அடுத்த வேடல், காந்தி நகரை சேர்ந்த கோபி (25), அரக்கோணம் அடுத்த வேடல் காந்தி நகரை சேர்ந்த விக்ரம் (32) ஆகியோரை அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி கைது செய்து சிறையில் அடைத்தார்.
இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.