சங்கராபுரத்தில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
சங்கராபுரத்தில் நடந்த குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் விநாயகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்துகொண்டு குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சங்கராபுரம் தாசில்தார் (பொறுப்பு) இந்திரா, மண்டல துணை தாசில்தார் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் திருமலை, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் மற்றும் பள்ளி மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு குழந்தை திருமணம் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர். இந்த பேரணியானது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.