தூக்குப்போட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை

கொள்ளிடம் அருகே காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் தூக்குப்போட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2022-05-06 17:11 GMT
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் தூக்குப்போட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். 
காதல் திருமணம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சி கேவரோடை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் பிரேம்குமார்(வயது 25). அதே தெருவை சேர்ந்தவர் அகோரமூர்த்தி மகள் ராஜலட்சுமி (23).  இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது ராஜலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜலட்சுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
சாவில் சந்தேகம் 
இது குறித்து ராஜலட்சுமியின் தந்தை அகோரமூர்த்தி புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகள் ராஜலட்சுமி சாவில் மர்மம் உள்ளது என கூறியுள்ளார். இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ராஜலட்சுமிக்கு திருமணமாகி 7 மாதமே ஆவதால் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்