புதிய அலுவலகம் கட்ட ரூ.4 கோடி ஒதுக்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதிய அலுவலகம் கட்ட ரூ.4 கோடி ஒதுக்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-05-06 17:07 GMT
தியாகதுருகம், 
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் புதிதாக கட்டுவதற்காக ரூ.3 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன் மற்றும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்  கார்த்திகேயன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில்  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், பூமா, சிவப்பிரகாசம், முருகன், தயாபரன் உள்பட அனைத்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்