கோபித்து சென்ற மனைவி திரும்ப வர மறுத்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கோபித்து சென்ற மனைவி திரும்ப வர மறுத்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை;

Update:2022-05-06 22:35 IST
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி அருகே உள்ள செம்பாலிபுதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கஸ்தூரி கணவரிடம் கோபித்து கொண்டு மகனுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து மாமனார் வீட்டுக்கு சென்ற மணிகண்டன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக தெரிகிறது. ஆனால் கஸ்தூரி கணவர் வீட்டுக்கு செல்ல மறுத்து விட்டாராம். இதனால் வேதனை அடைந்த மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்