அம்மன் சிலையில் கண் திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது

அம்மன் சிலையில் கண் திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது

Update: 2022-05-06 16:52 GMT
 
கோவை

கோவை காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தேவிஸ்ரீ பூமாரியம்மன் கோவில் உள்ளது. 

இந்த கோவிலில் தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள அம்மன் சிலையை அருகில் ஒரு வீட்டில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அந்த அம்மன் சிலைக்கு வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றது. 
அப்போது அம்மன் சிலையில் கண் திறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. 

உடனே அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து  அம்மன் சிலையை வழிபட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்