பாம்பு கடித்து சமையல் மாஸ்டர் பலி
பாம்பு கடித்து சமையல் மாஸ்டர் பலியானார்.
ராமநாதபுரம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா செங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமு என்பவரின் மகன் முத்துக்கருப்பன் (வயது 61). சமையல் மாஸ்டரான இவர் ராமநாதபுரத்தில் கழுகூரணி பகுதியில் நடைபெற்ற கட்டிட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சமையல் செய்வதற்காக வந்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியில் சென்ற இவரை திடீரென்று பாம்பு கடித்தது. ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து அவரின் மகன் முத்துமணி (37) அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.