பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் போட்டி தேர்வுக்கு பயிற்சி முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் போட்டி தேர்வுக்கு பயிற்சி முகாம் நடந்தது.;

Update: 2022-05-06 16:40 GMT

மொரப்பூர், மே.7-
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி நூலகம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4-தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் பா.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். நாமக்கல் சிவிக்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் தினேஷ் பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், சுலபமாக தேர்வை எழுதுவது எப்படி? உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசினார். ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் கி.ச.கல்யாணி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்