எருதாட்ட விழா

தொப்பூர் அருகே கோவில் விழாவில் எருதாட்ட விழா நடந்தது.

Update: 2022-05-06 16:40 GMT
நல்லம்பள்ளி:-
தொப்பூர் அருகே செக்காரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு நடத்தினர். பின்னர் அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தல், அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் எருதாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளையை அடக்கினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்