அரசு ஊழியர் அமைப்பு தின கொண்டாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு ஊழியர் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
மொரப்பூர்:-
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 39-வது அமைப்பு தினவிழா நடந்தது. வட்ட தலைவர் பெ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன கொடியினை மாவட்ட துணை தலைவர் சண்முகம், அரசு ஊழியர் சங்க கொடியினை வட்ட தலைவர் பெ.கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்து பேசினார். வட்ட பொருளாளர் ஜெ.அனுசுயா, வட்ட துணை தலைவர் ஆசைத்தம்பி, வட்ட இணை செயலாளர் இந்திரஜித், மகளிர் துணை குழு உறுப்பினர் தீபா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கராஜ், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் சேட்டு, வட்ட செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கடைபிடிக்கப்பட்டது. சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, காவேரி, ஜெயவேல், பிரபாகரன் உள்ளிட்டோர் சங்கப் பணிகள், கோரிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்். நிகழ்ச்சியில் அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடிகள் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.