குருபரப்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி பெண் சாவு

குருபரப்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி பெண் இறந்தார்.

Update: 2022-05-06 16:38 GMT
குருபரப்பள்ளி,:
ஓசூரில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, குந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் ஓசூரில் இருந்து நாமக்கல் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் பெங்களூருவில் இருந்து வந்த கார் தாறுமாறாக ஓடி லாரி மீது மோதியது. இந்த விபத்தில், காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பெங்களூரு, போடிச்சனஅள்ளி பகுதியை சேர்ந்த கனுக்கா (வயது 59) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்