கந்திகுப்பம் அருகே எந்திரத்தில் சிக்கி தொழிலாளி கால் துண்டானது
கந்திகுப்பம் அருகே எந்திரத்தில் சிக்கி தொழிலாளி கால் துண்டானது.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள தாண்டவன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித்தொழிலாளி. இவர் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி கிராமத்தில் நெல் அறுவடை எந்திரத்தின் மீது ஏறி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது நிலை தடுமாறி, எந்திரத்தில் அவரது இடது கால் சிக்கி துண்டானது. இதையடுத்து அவர் கந்திகுப்பம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.