கிருஷ்ணகிரியில் ஏரியில் மண் அள்ளி கடத்திய டிரைவர் கைது

கிருஷ்ணகிரியில் ஏரியில் மண் அள்ளி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-06 16:37 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் ஒம்பலக்கட்டு ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியே வந்த டிராக்டரை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒம்பலக்கட்டு ஏரியில் இருந்து மண் அள்ளி கிருஷ்ணகிரிக்கு கடத்தியது தெரிந்தது. இதையடுத்து டிராக்டர் டிரைவர் அதே பகுதியை சேர்ந்த வடுகப்பன் (வயது30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்