வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவையொட்டி ரேக்ளா போட்டி
வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவையொட்டி ரேக்ளா போட்டி நடந்தது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி இன்று ரேக்ளா போட்டி நடந்தது. பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என 3 பிரிவாக போட்டிகள் நடந்தது. இதற்கு ரேக்ளா போட்டி குழு தலைவர் அன்பழகன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். பரம்பரை பூசாரி சண்முகநாத பாண்டியன், ஊர் முஸ்லிம் நாட்டாமை உச்சிகான்சாயுபு, பெரியகுடியானவர் சவுந்தர், ஊர் பெரியவர் சேர்வைகாரர் அசோகன், கீதாரி பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் முதலாவதாக வந்த 3 ரேக்ளாக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.