கார்-மினி பஸ் மோதி விபத்து; இளம்பெண் உள்பட 2 பேர் பலி

கார் மீது மினி பஸ் மோதி விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2022-05-06 15:17 GMT
பெங்களுரு:

  பெங்களூரு அருகே நைஸ் ரோட்டில் உள்ள பி.டி.ஏ. சுங்கச்சாவடியையொட்டி நேற்று முன்தினம் மாலையில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு வேலியை இடித்து தள்ளிவிட்டு எதிர் ரோட்டிற்கு சென்றது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு மினி பஸ் மீது கார் மோதியது. 

இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மினி பஸ்சும் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த இளம்பெண்ணும், டிரைவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானாா்கள். மினி பஸ் டிரைவரின் கால் முறிந்ததுடன், 19 பயணிகளும் படுகாயம் அடைந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்த கெங்கேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த சுமுக்(வயது 23), அவரது தோழி லீனா நாயக்(19) என்று தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்